இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். பொதுவாகவே மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பாச போராட்டம் என்பது அதிகம் தான். அதிலும் தாயின் பாசம் காண்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடுகிறது.

அதனைப் போல தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் கங்காரு ஒன்று ராட்சத பாம்பிடம் சண்டை போடுகிறது. அதாவது தன்னுடைய குட்டியை சுற்றி வளைத்திருக்கும் பாம்பிடம் இருந்து அதனை மீட்பதற்கு போராடுகிறது. இந்த காட்சியின் இறுதி முடிவு என்ன என்று தெரியாத நிலையில் சில நொடிகள் மட்டும் காணப்படும் இந்த காட்சியில் கங்காருவின் தாய் பாசம் மனிதர்களை கலங்க வைக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.