
தமிழகத்தில் தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அனுப்பப்படும் தக்காளிகள் தான் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரையில் விற்பனையானது.
இந்த நிலையில் தற்போது தக்காளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி தற்போது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளி வரத்தை அதிகரித்துள்ளதால் முதல் தர தக்காளி 30 ரூபாய்க்கும், இரண்டாம் தரத் தக்காளி 25 ரூபாய்க்கும், 3-ம் தர தக்காளி 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.