
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிரஸ் அலவன்ஸ் வழங்கும் விதிகளில் நிதி அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது. நீண்ட காலமாக ஊழியர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் மட்டுமே டிரஸ் அலவன்ஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, ஜூலைக்குப் பிறகு பணியில் சேரும் புதிய ஊழியர்களுக்கும் விகிதாசார அடிப்படையில் அந்த அலவன்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் கீழ், ஜூலைக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியருக்கான டிரஸ் அலவன்ஸ் கீழ்க்கண்ட வகையில் கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு ஊழியர் டிசம்பர் மாதத்தில் பணியில் சேர்ந்தால், ஆண்டுக்கான டிரஸ் அலவன்ஸ் ரூ.10,000 என்றால், (ரூ10,000/12) × 7 = ரூ5,833 ஆக அலவன்ஸ் வழங்கப்படும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், டிரஸ் அலவன்ஸ் வழங்கப்படுகிறது. இது ஊழியர்களின் அடிப்படை யூனிஃபாரத்திற்கு மட்டும் பொருந்தும். அதற்கு மேலாக தேவையான சிறப்பு உடைகள் சம்பந்தப்பட்ட துறைகளால் தனித்தனியாக வழங்கப்படுகின்றன. மேலும், DA தொகையானது 50% ஆக உயரும்போது, டிரஸ் அலவன்ஸும் 25% உயர்த்தப்படும் என 7வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ளது.