
உலக அளவில் கேன்சர் போன்ற எய்ட்ஸ் நோயும் ஒரு குணப்படுத்த முடியாத வியாதி. இந்த நோய்க்கு தற்காலிக தீர்வாக மருந்து மாத்திரைகள் இருக்கிறது. இருப்பினும் முழுமையாக குணப்படுத்த மருந்து மாத்திரைகள் இல்லை. சமீபத்தில் ரஷ்யா கேன்சரை குணப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது எய்ட்ஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை USA மருத்துவ நிர்வாகம் அங்கீகரித்துள்ள நிலையில் இதனை Gilead Sciences நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் பெயர் Lenacapavir.
இந்த தடுப்பூசி தொடர்பாக தாய்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது. இதற்கான டிமான்ட்டும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை வருடத்திற்கு இரண்டு முறை எடுக்க வேண்டும் எனவும் ஆனால் சாதாரண மக்களுக்கு இதன் விலை கட்டுபடியாகாது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1983 ஆம் ஆண்டு முதன்முதலாக எய்ட்ஸ் நோய் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பின்னர் தான் உலக அளவில் அது பரவத் தொடங்கியது. இந்த எய்ட்ஸ் நோயினால் உலகம் முழுவதும் இதுவரை 4.20 கோடி பேர் இறந்துள்ளனர். தரவுகளின் படி கடந்த வருடம் மட்டும் எய்ட்ஸ் நோயினால் 3.99 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் நிவாரணமாக மாறி உள்ளது.