தமிழகத்தில் செப்டம்பர் மாதத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தினங்கள் குறித்து பார்க்கலாம். அதன்படி இந்த மாதத்தில் மட்டும் சுமார் 9 நாட்கள் விடுமுறை தினங்களாக இருக்கிறது. அதன்படி இன்று செப்டம்பர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. அதன் பிறகு செப்டம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றும் பொது விடுமுறை. இதனையடுத்து அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை.

அதன்பிறகு செப்டம்பர் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஓணம் பண்டிகை என்பதால் அன்றைய தினமும் விடுமுறை. செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி என்பதால் அன்றைய தினமும் விடுமுறை. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது விடுமுறை. மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதற்கு அடுத்த நாள் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினமும் வாராந்திர  பொது விடுமுறை. மேலும் மொத்தமாக செப்டம்பர் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வரும் நிலையில் அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை தினங்கள் ஆகும்.