தமிழக சட்டசபையில் மார்ச்  முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று கூறினார். இந்த நிலையில் தற்போது புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது சென்னையில் உள்ள செனாய் நகரில் ஒரு அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை கூடுதல் செயலாளர் அமுதா ஐஏஎஸ் கலந்துகொண்டார். அப்போது ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்றார். மேலும் அதன்படி புறம்போக்கு நிலத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.