சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களாக குறைந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 7940 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய் ஆகவும் இருக்கிறது.

அதன் பிறகு 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 8662 ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 69,296 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 105 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 105000 ரூபாயாகவும் இருக்கிறது.

இந்நிலையில் 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 1080 வரையில் குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது யுஎஸ்ஏ ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றங்களின் மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், டிரம்ப் அதிபர் ஆனது முதலே பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். எது எப்படியோ தங்கம் விலை குறைந்தால் மகிழ்ச்சி தான் என்கிறார்கள் இல்லத்தரசிகள்.