
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), சந்தாதாரர்கள் யுனைடெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அமைப்புகளைப் பயன்படுத்தி ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) கோரிக்கைகளைச் செயல்படுத்தவும், தடையற்ற பணப் பரிமாற்றத்தைப் பெறவும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. EPF UPI உடன் இணைக்கப்பட்டவுடன், பயனர்கள் தங்கள் கோரிக்கைத் தொகையை ATM மூலம் எளிதாக எடுக்க முடியும் என்று FE தெரிவித்துள்ளது.
இந்நிலையில் யுபிஐ மூலமாக பிஎஃப் சேமிப்பு பணத்தை எடுக்கும் வசதி வரும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த நடைமுறை அமலானால் PF சந்தாதாரர்கள் போன் பே, கூகுள் பே, பேடிஎம் மூலமாக சில நிமிடங்களிலேயே சேமிப்பு பணத்தை எடுக்கலாம். UPI உடனான ஒருங்கிணைப்பு மூலம் தனது 7.4 மில்லியன் வாடிக்கையாளர்களை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்காக EPFO இந்த மாற்றத்தை செயல்படுத்துகிறது.