நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. 6 கட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் 1 கட்ட தேர்வு மட்டும் உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் குமரி விவேகானந்தர் தியான மண்டபத்தில் பிரதமர் மோடி 2 நாள்கள் தியானம் செய்ய உள்ளார்.

விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31ஆம் தேதி மாலை தியானத்தை தொடங்கும் அவர், ஜூன் 1ஆம் தேதி வரை இரவு பகலாக தியானத்தில் ஈடுபடுகிறார். ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், பிரதமர் தியானம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.