சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுகவைச் சார்ந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் மொழி அரசியலை புகுத்தி அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு இந்தியை மூன்றாவது மொழியாக சேர்க்க வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. மூன்றாவதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் புதிய தேசிய கொள்கையாக உள்ளது. தமிழ் மிக தொன்மையான மற்றும் பழமையான மொழி என்று உலக நாடுகளில் பிரதமர் மோடி கூறி வருகின்றார்.

திருவள்ளுவருக்கு உலகம் முழுவதும் சிலை அமைக்கப்படும் என்ற பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதனை ஐந்து இடங்களில் நிறைவேற்றியும் உள்ளோம். மத்திய அரசுக்கு ஒப்புதல் கொடுக்காததால் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வரவேண்டி நிலுவையில் உள்ளது. இளைஞர்கள் முன்னேற்றத்திற்கு தடை போடாமல் தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். ரயிலில் ஏறி கும்மிடிப்பூண்டி தாண்டினால் ஒருவர் திட்டுவது கூட நமக்கு தெரியாது. சிரித்துக் கொண்டே திட்டுவார்கள். ஒரு மொழியை கற்றுக் கொள்வது என்பது மற்றொரு மொழி மீது பற்றுதல் ஏற்படுத்தும். தமிழ் மொழி போல மற்றொரு மொழி மீதும் பற்று ஏற்படுவதில் என்ன தவறு இருக்கின்றது. இன்னொரு மொழியை கூடுதலாக கற்றுக் கொள்வதில் என்ன தவறு எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.