கரோல்காஜ் என்னும் பகுதியில் ஒரு 3 மாடி  கட்டிடத்தில் கீழ் ஜிதேஷ்(18)என்னும் வாலிபர் அவரது நண்பரான ஃபிரான்சு என்பவர் உடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்றாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி ஜிதேசின் தலையில் விழுந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதோடு ஃபிரான்சு சில காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யும் போது கட்டிடத்தின் உரிமையாளர் ஏசி கீழே விழுவதற்கு குரங்குகள் தான் காரணம் என்று கூறினார். அதற்கு போலீசார் சரியாக பொருத்தப்பட்டிருந்தால் ஏசி விழுந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து ஜிதேசின் உயிரிழப்பு அவருடைய குடும்பத்தினருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஜிதேஷின் உயிரிழப்பை ஏற்றுக் கொள்ள முடியாத குடும்பத்தினர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த சம்பவத்தை விவரிக்க மறுத்துவிட்டனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஃபிரான்சு உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும், அவர் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

இதுபோன்ற சிலரின் அலட்சியமான செயலால் விபத்துக்கள் உருவாகி உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.