சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை குரங்கு ஒன்று தாக்கியதுடன் அவரை கடித்துள்ளது. இதனால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து உணவுப்பொருட்களை உண்பதோடு வீட்டில் உள்ள குழந்தைகள் உள்ளிட்டோரையும் அச்சுறுத்தி வருகின்றன.

இதைத்தொடர்ந்து குரங்குகள் குடிநீர் குழாய்களை திறந்து விட்டு தண்ணீரை வீணாக்குவதுடன் வீதிகளில் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பொருட்களையும் பறித்து செல்கின்றன. இந்நிலையில் சம்பவ நாளன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீரென மருத்துவமனையின் நுழைவாயிலில் உள்ள கேட்டில் மேல்புறம் அமர்ந்து கொண்டு குரங்கு போல் சைகை காட்டி வந்துள்ளார். (அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் )

இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின் சிறிது நேரத்தில் அவர் அருகில் உள்ளவர்களை தாக்கியதுடன் கடிக்க முயன்றுள்ளார். இதனால் மருத்துவமனையின் காவலாளிகள் அங்கு வந்து அவரை கீழே இழுத்து கட்டுக்குள் வைத்தனர். மேலும் மருத்துவமனையில் சிறிது நேரத்திற்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாக்கியதுடன் தற்போது அது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் fact check குழு இதை ஆய்வு செய்ததில் இது முற்றிலும் பொய்யான தகவல் எனவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்துள்ளது. இது குறித்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

“>