மனிதர்களின் முன்னோடியான ‘லூசி’ எனப்படும் Australopithecus afarensis இனத்தை சேர்ந்த உயிரினத்தின் முகம் முதன்முறையாக புனரமைக்கப்பட்டு உலகிற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட லூசி, 3.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார்.

இவர் தவழ்ந்து நடக்கும் முன் மனிதர்களைப் போல இரண்டு கால்களில் நடக்கத் தக்க உடல் அமைப்புடன் இருந்தது பெரும் கண்டுபிடிப்பாக இருந்தது. அவரது மூளையின் அளவு சிம்பான்சிகளுக்குச் சமமாக இருந்தாலும், நேராக நடக்கும் திறன் இருந்தது மனிதர் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய கட்டமாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Cicero Moraes (@cogitas3d)

தற்போது நவீன ஃபோரன்ஸிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன், லூசியின் தலையின் 3D ஸ்கேன் மற்றும் சிம்பான்சிகளின் மிருதுத் திசு தரவுகளைக் கொண்டு, அவர் எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகளும் கலைஞர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்த புனரமைக்கப்பட்ட முகம், மனிதனின் பரிணாமப் பயணத்தைப் பார்வையிடும் வாய்ப்பை தருகிறது. அவரது முகம் சிம்பான்சிகளை விட சற்று நெளிந்ததும், குறைவான புருவ எலும்பு அமைப்பும் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய தோலும் முடியும் கருப்பு நிறத்தில் இருந்திருக்கலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அவரது உடல் பகுதிகள் மரம் ஏறுவதற்கும், நிலத்தில் நடப்பதற்கும் ஏற்ற அமைப்பில் இருந்ததோடு, அவரது எலும்புகள் ஆகஸ்ட் மாதம் செக் குடியரசில் உள்ள ப்ராக் தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.