தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஏன் கபட நாடகமாகிக் கொண்டிருக்கிறார். தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும்  என்று யார் சொன்னார்கள்  என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும். தொகுதி மறுவறையில் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் கொண்டு வருவது எங்களுடைய கடமையாகும். மக்கள் மத்தியில் ஸ்டாலின் பயத்தை ஏற்படுத்துகின்றார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு ஒரே தேர்தல் திட்டம் எங்கள் எதிரி என்று திமுக கூறுகின்றது. குருட்டு பூனை விட்டத்தில் பாய்வதைப் போல முதல்வர் பேசிக் கொண்டிருக்கிறார். தொகுதி மறு வரையறையில் தமிழகத்திற்கு பாதிப்பு என யார் சொன்னது என்பதை முதல்வர் விளக்கமாக கூற வேண்டும். மூன்று மொழிகள் படித்த சாதனையாளர்கள் யாரும் முதல்வருடைய கண்ணுக்கு தெரியவில்லையா? திமுகவின் குடும்பத்தில் இருக்கின்ற குழந்தைகள் மூன்று மொழிகள் படிப்பதும் தமிழ்நாட்டு மக்கள் இரண்டு மொழி படிக்க வேண்டும் என்பதே திமுகவின் மொழி போராட்டம். மூன்றாவது மொழியாக எந்த மொழி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தி தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. இருமொழி கொள்கையால் தான் மாநிலம் கல்வியில் முன்னேறியது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.