தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் இமான் அண்ணாச்சி. இவர் தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய காமெடியான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் வெள்ளித் திரை யில் வாய்ப்பு கிடைத்து காமெடி கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து இன்று ரசிகர்களால் அறியப்படும் ஒரு பிரபல நடிகராக இருக்கிறார்.

இவர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் தன் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் திடீரென ஒரு மாடு குறுக்கே வந்தது. அந்த மாடு மீது எதிர்பாராத விதமாக கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் இமான் அண்ணாச்சி மற்றும் அவருடைய குடும்பத்தினர் உயிர் தப்பினர். மேலும் இந்த செய்தியை இமான் அண்ணாச்சியே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.