நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் பத்து வருட காதலுக்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். உயிர், உலகம் என தங்கள் மகன்களுக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் தங்கள் மகன்கள் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அதை ஒட்டி தன்னுடைய மகன்களோடு விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் உலகில் உள்ள அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.