சொந்த வீடு வாங்க முயற்சிக்கும் போது வீட்டுக்கடன் செயல்முறைகளை சரியாக திட்டமிட வேண்டும். முக்கியமாக கடனுக்கான காலம் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை அமைய வேண்டும். மாத தவணை சுமையை குறைக்க நீண்ட காலத்தை நாட விரும்பலாம். இருந்தாலும் நீண்ட கால வாய்ப்பை நாடும் போது மொத்தமாக செலுத்த வேண்டிய வட்டி தொகையும் அதிகமாக இருக்கும்.

வீட்டுக் கடன் என்பது நீண்ட கால பொறுப்பு என்பதால் அதனுடன் காப்பீடு பெறுவதும் அவசியமாகும். 20 ஆண்டுகளுக்கு 30 லட்சம் வீட்டுக் கடன் எடுப்பதாக இருந்தால் ஸ்டேட் பாங்க் 8.50 சதவீதம் முதல 9.65 சதவீதம் வரை வட்டியில் கடன் வழங்குகின்றது. அதனைப் போலவே bank of india 8.40 சதவீத முதல் 10.85 சதவீதம் வட்டியிலும், இந்தியன் வங்கி 8.40% முதல் 10.35 சதவீதம் வட்டியிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 8. 40 சதவீத முதல் 10.60 சதவீதம் பட்டியலும் கடன் வழங்குகின்றன. மற்ற வங்கிகளின் வட்டி இஎம்ஐ விவரங்களை அறிய பட்டியலை பார்க்கவும்.