மேற்கு வங்கத்தில் மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் 18 வயது இளம்பெண்ணை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த நடிகர் சரத்குமார் தனது வேதனையை வெளிப்படுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதே குற்றங்களை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வர உதவும் என கூறியுள்ளார்.