
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அளவு இல்லாததன் காரணமாக குற்றால மெயின் அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் பெய்தால் மழை காரணமாக அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஐந்தருவியல் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் தடை விதித்தனார். ஐந்தருவியில் மட்டும் குளிப்பதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வெள்ளம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கும் பட்சத்தில் இந்த அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.