
நலம் தரும் சில பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
- திருஷ்டி, பில்லி, சூனியம், கடன் தொல்லை, ஏவல், திருமணத்தடை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நரசிம்மரை வழிபடுவதன் மூலம் நன்மை பெறலாம்.
- 11 மாதங்கள் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் திருமண தடை அகன்று விரைவில் திருமணம் கைகூடும்.
- வேலை வாய்ப்பின்றி இருப்பவர்கள் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் மூன்று மாதத்திற்குள் நல்ல வேலை கிடைக்கும்.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- குலதெய்வத்தின் அருள்பெற வீட்டில் வாழைத்தண்டு திரி கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். இதன் மூலம் குலதெய்வ சாபத்தையும் குலதெய்வ குற்றத்தையும் நீக்க முடியும்.
- கோவிலில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சை பழத்தை குத்தி வழிபட்டால் செய்வினை, திருஷ்டி போன்றவை நீங்கும்.
- சிவன் கோவில்களில் அமைந்துள்ள வில்வம் மரம், வன்னி மரத்தை 21 முறை வலம் வந்து நமது பிரச்சனைகளை கூறினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நாம் கூறுவதை கேட்கும் சக்தி இம்மரங்களுக்கு இருப்பதாக ஐதீகம் உண்டு.