உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆக்ரா என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு சாலையில் மதுபானங்கள் ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கிய போது திடீரென குலுங்கியது. இதில் வண்டியில் இருந்த மதுபான பெட்டிகள் தவறி கீழே விழுந்தது. அதாவது அந்த வண்டியில் மொத்தம் 110 பெட்டிகள் இருந்த நிலையில் டாஸ்மாக் கடைக்காக அவைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் சுமார் 30 பெட்டிகள் வரை கீழே விழுந்துள்ளது.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து மது பாட்டில்களை அள்ளி சென்றனர். இந்நிலையில் மது பாட்டில்கள் கீழே விழுவதை அறிந்த ஓட்டுனர் திரும்பி வருவதற்குள் அனைத்து பாட்டில்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.