
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி கிராமத்தைச் சேர்ந்த இஸ்ரவேலின் மனைவி தங்கம்மாள் (வயது 77), தனது மாற்றுத்திறனாளி மகள் குளிக்கும்போது பாத்ரூமில் எட்டிப் பார்த்ததாகக் கூறி, அதே ஊரைச் சேர்ந்த மார்ட்டின் என்ற ஜெபஸ்டின் என்பவர் மீது கடந்த 2023-ஆம் ஆண்டு நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மார்ட்டினை கைது செய்தனர்.
இந்த வழக்கு சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்ற கூடுதல் பொறுப்பு நீதிபதி வரதராஜன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மார்ட்டின் என்ற ஜெபஸ்டினுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட தங்கம்மாளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.