மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த குழாய் மூலம் ஜன்னல் அருகே சென்றார். பின்னர் தனது செல்போனில் அந்தப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்தார்.

இதனை அந்தப் பெண் பார்த்த நிலையில் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்டார். பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் பிரசாத் ரத்னராஜ் என்பது தெரிய வந்தது. இவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.