
பாலிவுட் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது கர்ப்பப்பை வாய் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இறந்து விட்டதாக பொய் செய்தி வெளியிட்டதாக பூனம் பாண்டே கூறினார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக குளியலறையில் நிறுவனமாக நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோவை விளம்பரத்திற்காக அவர்தான் வெளியிட்டதாக பலரும் நினைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை பூனம் பாண்டே தன்னுடைய அந்த வீடியோவை முன்னாள் காதலன் நான் வெளியிட்டதாக கூறியுள்ளார்.
அதாவது குளியலறையில் தான் எடுத்துக் கொண்ட அந்த வீடியோவை தன்னுடைய முன்னாள் காதலன் எனக்கு தெரியாமல் வெளியிட்டதாகவும் அவர் இவ்வளவு கீழ்த்தரமானவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அதாவது தன்னுடைய முன்னாள் காதலனும் வீட்டில் வசித்த போது திடீரென ஏற்பட்ட தகராறில் அவர் தன்னை கொலை செய்ய முயன்றதால் அவரிடமிருந்து தப்பித்து தந்தை வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் என்னை மீண்டும் திரும்பி வருமாறு கூறினார். ஆனால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் செல்போனில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டினார். மேலும் அதை நான் கண்டுகொள்ளாததால் என்னுடைய அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பரப்பினார் என்று கூறியுள்ளார்.