திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே வாயில் நுரை தள்ளி  குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குளிர்பான ஆலையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள குளிர்பானக் கடைகளில் சோதனையிடவும், காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.