கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அதாவது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பார்த்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த 18ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி நாக பிரசன்னா விசாரித்தார். அப்போது அவர் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் கிடையாது என்று தீர்ப்பு வழங்கினார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதால் தற்போது நீதிமன்றம் தீர்ப்பினை திரும்ப பெற்றுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் கூறியதாவது, இங்கே இருப்பவர்களும் மனிதர்கள் தான். எங்கள் தரப்பிலும் தவறுகள் நடப்பது சகஜம் தான். இருப்பினும் எங்கள் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு வேண்டும். மேலும் தவறாக வாசிக்கப்பட்ட இந்த தீர்ப்பை திரும்ப பெறுவதோடு வழக்கில் புதிய தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.