
முதலீட்டு தேவைக்காக பான் கார்டு ஆனது தேவைப்படுகிறது. அந்தவகையில் பெரியவர்களுக்கு தான் பான் கார்டு எடுப்பது அவசியம். ஆனால் குழந்தைகளுக்கும் பான் கார்டு அவசியமா? என்று தெரிந்துகொள்வோம். அதாவது உங்களுடைய குழந்தையின் பெயரில் முதலீடு செய்தால் அதற்கு பான் கார்டு என்பது கட்டாயம் தேவை .அதைப்போல உங்களுடைய முதலீடுகளுக்கு உங்கள் குழந்தையை நாமினியாக்க விரும்பினால் அதற்கும் பான் கார்டு முக்கியமாக தேவைப்படுகிறது.
தற்போது பள்ளிகளில் இருந்தே குழந்தைகளுக்கு வங்கி கணக்கு திறக்க சொல்கிறார்கள். அப்போது பான் கார்டு தேவைப்படலாம். மேலும் குழந்தைகளுக்கு வருமானம் வரும் ஆதாரம் இருந்தாலும் பான் கார்டு அவசியம் தேவை தான்.