புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள கீழ காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (28) ஆகியோர் கட்டிடம் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகளும்,  2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வீரமுத்து மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு, கல்லுபள்ளம் கிராமத்தில் நடந்த கோயில் திருவிழா நாடகத்தை இருவரும் இணைந்து காண சென்றனர்.

திருவிழாவை முடித்து வீடு திரும்பிய பின்னர், மீண்டும் கணவன், மனைவிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் வீரமுத்து, தனது தாய் லட்சுமியின் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு வந்தார். நேற்று காலை, லட்சுமி குழந்தைகளை அழைத்து வரும்போது, ராஜேஸ்வரி கழுத்தில் வெட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

வீட்டின் தாழ்வாரத்தில் வீரமுத்து தூக்கிட்டு உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.