
தஞ்சாவூர் மாவட்டம் பூண்டித்தோப்பு பகுதியில் ஜேம்ஸ் ராஜா (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எம்.காம் பட்டதாரி ஆவார். இவர் பிஎச்டி படித்து வந்த நிலையில், இவர் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்து அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக அவருக்கு google எச்சரிக்கை செய்தி ஒன்றினை அனுப்பிய நிலையில் தான் செய்யும் குற்றங்களை மறைக்குமாறு போனில் ஏதோ அப்டேட் செய்துள்ளார்.
இருப்பினும் அவர் செய்த குற்றங்களை google காட்டி கொடுத்துள்ளது. அதாவது இவர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதில் 4 பேர் 10 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார். அதன் பிறகு ஜேம்ஸ் 5 முதல் 16 வயதிற்கு உட்பட்ட பலரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதோடு அதனை போட்டோ மற்றும் வீடியோவாக எடுத்து இணையதளங்களில் விற்பனை செய்துள்ளார். இவரால் ஏராளமான சிறுவர் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இப்படி விற்பனை செய்துவந்துள்ளார். அதன் பிறகு இவர் பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அதில் சில சிறுவர் சிறுமிகளை மிரட்டி அவர்களையும் அதுபோன்ற குற்றங்களை செய்ய வைத்து வீடியோவாக எடுத்துள்ளார். இவரை கடந்த 2023 ஆம் ஆண்டு சிபிஐ கைது செய்த நிலையில் அது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி குற்றவாளி என ஜேம்ஸ் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.6.5 லட்சம் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.