
அரியலூரில் பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை சொந்த தாத்தாவே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாத்தா வீரமுத்து(58) என்பவர் இதுகுறித்து கூறிய வாக்குமூலத்தில், தனக்கு ஆண்மகன் இருந்திருந்தால் இந்த குழந்தையால் அவனுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், ஆண்மகன் இல்லாததால் தாத்தாவாகிய தனக்கு ஆபத்து என்றும் ஜோசியர் கூறினார்.
இதன் காரணமாக குழந்தையை தூக்கிக் கொண்டு எங்கேயாவது சென்று விடலாம் என்று எண்ணினேன். பின்னர் உணர்ச்சிவசப்பட்டு அதிகாலையில் எழுந்து குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டு மூடி விட்டு பின் வழக்கம் போல் உறங்கி விட்டேன் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.