தமிழகத்தில் வடசென்னை பகுதியில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவு நடப்பதாக பரவும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இதனால் இந்த செய்தியானது குழந்தைகைளின் பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை இதுகுறித்தது விளக்கம் அளித்துள்ளது.

அதில், இது போன்ற குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் நடப்பதாக பரவும் வீடியோக்கள் அனைத்தும் நமது மாநிலத்துக்கு தொடர்பு அற்றவை . எனவே தவறான தகவல்களை பார்த்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளது.