நைஜீரியா நாட்டில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிட்டத்தட்ட 16 பேரை உயிரோடு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அந்நாட்டின் வடக்கு பகுதியில் சிலர் வண்டியில் சென்று  கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவர்களை குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து உயிரோடு தீ வைத்து கொளுத்திய நிலையில் அவர்கள் உடல் கருகி பலியாகினர்.

இந்த தாக்குதலில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள். நைஜீரியாவின் தெற்கு பகுதியில் கடத்தல் மற்றும் சூனியம் என்ற பெயரில் இது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து சிலரை அவர்கள் தலையை பிடித்து இழுத்துச் சென்று டயரில் வைத்து கொடூரமாக தீ வைத்து எரித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்