
பெற்றோர் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமங்களில் சேர்க்கப்படும் நிலையில் குழந்தை இல்லாதவர்கள் அவர்களை தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 மூன்றாவது குழந்தை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டி பெற்றோர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், அரசியலமைப்பின் 21வது பிரிவின் அடிப்படையில் உரிமையாக கருத முடியாது என்றும் பெற்றோர் யாரை தத்தெடுப்பது என்பதை தேர்வு செய்வதற்கு உரிமை கிடையாது என்றும் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் உடைய நலனை மையப்படுத்தி தத்தெடுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை உள்ள பெற்றோர் சாதாரண குழந்தைகளை தத்தெடுக்கப்படுவது குறைவாகவே உள்ளது. இந்த குழந்தைகளை அதிக அளவில் தத்து எடுப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.