சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதுகுறித்து அறிந்த வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பழனிச்சாமி(60) என்ற முதியவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.