
குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 பேர் வசித்து வரும் நிலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 49 இந்தியர்கள் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகு பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இறந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் இறந்தவர்களில் 30-க்கும் மேற்பட்டவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதில் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி தாமஸ் உம்மன், சாஜு வர்கீஸ், முரளிதரன், ரஞ்சித், கெலு பொன்மலேரி, லூகோஸ், உமருதீன் சமீர், ஆகாஷ் எஸ். நாயர் ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தியாவைச் சேர்ந்த டென்னி பேபி கருணாகரன், ஜீசஸ் லோபஸ், ரேமண்ட், அருண் பாபு, விஸ்வாஸ் கிருஷ்ணன், துவரி கேஷ் பட்நாயக், முகமது ஷரீப், அணில் கிரி, பூனத் ரிச்சர்ட் ராய் ஆனந்த், பிரவீன் மாதவ் மற்றும் தாமஸ் ஜோசப் ஆகியோரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த செய்தி அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.