குவைத் நாட்டின் மங்கப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த செய்தியானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குபைத் தீ விபத்து தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு தமிழக அரசு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

மேலும் குபை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவலை சேகரிக்கும் படி அயலக தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விபத்து குறித்த விவரங்களுக்கு இந்தியா: +91 180093793.