
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இன்று மகா மக குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடக்க உள்ளது. இதன் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் செயல்படாது. இதனை ஈடுகட்ட வருகிற 29ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று பொது தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால் அது வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.