
தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்து முன்பே அரசு அறிவித்திருந்தது. தற்போது 2025 ஆம் ஆண்டு பிறப்பதற்கு 4 நாட்கள் தான் இருக்கிறது. இதனை முன்னிட்டு 2025 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை குறித்து தற்போது பார்ப்போம். அதன்படி மொத்தம் 23 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை. இதனையடுத்து ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜனவரி 16ஆம் தேதி உழவர் திருநாள், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம், பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசம், மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 10-ம் தேதி மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளி, மே 1ஆம் தேதி மே தினம் ஆகியவற்றை முன்னிட்டு அரசு விடுமுறை.
அதன்பிறகு ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகை, ஜூலை 6-ம் தேதி மொகரம், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 16ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு விடுமுறை. மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி மிலாதுநபி, அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி, அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை என மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை.