தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்தது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் தேர்வு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்து முடிந்த நிலையில் மே 16ஆம் தேதி ரிசல்ட் வரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கும் நிலையில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.

அப்படி பார்த்தால் இன்று முதல் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் விடுமுறை. அதன்பிறகு மே மாதம் 31 நாட்கள் விடுமுறை. ஆக மொத்தம் 46 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 2 அல்லது 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் 48 முதல் 49 நாட்கள் வரை விடுமுறை வரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.