
தமிழகத்தில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய அய்யா வைகுண்டரை தென் மாவட்டங்களில் ஏராளமான மக்கள் போற்றி வழிபடுகிறார்கள். இதன் காரணமாக அய்யா வைகுண்டரின் பிறந்த தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை வழங்கி உத்தரவிட்ட நிலையில் தற்போது தென்காசி மாவட்டத்திற்கும் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இதனால் மொத்தம் நான்கு மாவட்டங்களுக்கு 4-ம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.