
தமிழகத்தில் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு இன்று 5 மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விழுப்புரம் மாவட்டத்திற்கும் இன்று அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது தென் மாவட்டங்களில் அய்யா வைகுண்டரை ஏராளமானோர் பின்பற்றுவார்கள். இதன் காரணமாக இன்று அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 14ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டும் உள்ளூர் விடுமுறை. மேலும் இதன் காரணமாக பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் இன்றைய தினம் செயல்படாது.