தமிழகத்தில் அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. அதன்படி மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31 ஆம் தேதி திங்கள்கிழமை ரம்ஜான் பண்டிகை என மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி வங்கி கணக்கு முடிவுக்காக வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை. மேலும் அடுத்த வாரம் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை வருவது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.