
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 20,000 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பிராட்பேண்ட் இளையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் பணி நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6,992 உயர்தர ஆய்வகங்கள் அமைக்கப்படுவதாகவும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் திறனை மேம்படுத்தும் விதமாக 79,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது