
தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நிறைவடைந்தது. எனவே நேற்று முதல் முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் நேற்றுடன் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்குகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் கோடை விடுமுறை தொடங்கும் என்பதால் மொத்தம் 45 நாட்கள் விடுமுறை. மேலும் இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குவது மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோடை வெப்பத்தின் காரணமாக முன்கூட்டியே பள்ளிகளுக்கு தேர்வுகளை முடித்து விடுமுறை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.