
தமிழகத்தில் நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது அரசாங்கம் அரை நாட்கள் விடுமுறை வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் அரை நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கும் மறுநாள் விடுமுறை வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்த நிலையில் அரசு அதனை ஏற்று நவம்பர் 1ஆம் தேதியைக் விடுமுறை நாளாக அறிவித்தது.
இதன் காரணமாக தீபாவளியை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை ஆனது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை வேண்டுமென்று அரசுக்கு கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை ஏற்று இன்று காலை மட்டுமே பள்ளி கல்லூரிகள் செயல்படும் என்றும் மதியத்திற்கு பிறகு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.