
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 15 நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை வருகிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் வழக்கம் போல விடுமுறையாகும்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறையாகும். அதே சமயம் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.