
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு இன்று இறுதித் தேர்வுகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 45 நாட்கள் கொண்ட கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே 10ம், 11ம் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் இறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறன. அவர்களது தேர்வுகள் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், அதற்குப் பிறகு அவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.