
மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டம் தான் பிஎப் என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு திட்டமாகும். இந்த திட்டமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. EPFO ( Employee Provident Fund organisation) என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில் பொருளாதார சிரமமும் இல்லாமல் வாழ்வதற்கு இந்த திட்டம் பெரிதும் பயன்படுகிறது.
இந்நிலையில் இபிஎஃப்ஓ தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டுக்கான EPF கையிருப்பில் 8. 25 சதவீத வட்டியை இறுதி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டிலும் 2024-25 ஆம் நிதியாண்டின் தொடக்கத்திலும் இறுதி தீர்வு செய்தவர்களுக்கு இந்த வட்டி விகிதம் வழங்கப்படும். தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கும் அதே வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் மிக உயர்ந்த வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.