தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோயின்களான குஷ்பூ, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் குஷ்பூக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் நாகச்சதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்தை பெற்று விட்டார்.

இந்த நிலையில் இவருக்கு ஆந்திர மாநிலத்தில் ரசிகர் ஒருவர் கோவில் கட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதனை அடுத்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்காக கோவில் கட்டியுள்ளார். கோவில் அமைத்து கோவிலில் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறாராம். கோவிலின் நுழைவாயிலில் சமந்தா கோவில் என்று பெயர் வைத்துள்ளார்.