கூகுள் மேப் என்பது ஒரு புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருளாகும். இதன் உதவியுடன் இந்தியாவில் உள்ள எந்த பகுதிகளுக்கும் எளிதாக சென்று வரலாம். இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இல்லையில் சில சமயங்களில் தவறான பாதையை காண்பித்து விடுவதால் பிரச்சினைகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் google மேப் உதவியுடன் சென்ற கார் ஆற்றுக்குள் புகுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தில் அப்துல் ரஷீத் (35), தஷ்ரீப் (36) என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் சம்பவ நாளில் கர்நாடகாவில் உள்ள உப்பனங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர்.

அவர்கள் google map உதவியுடன் சென்ற நிலையில் குட்டி கோல் நல்லாட்சி ஆற்றின் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் ஆற்றுக்குள் பாய்ந்தது. அதாவது அந்த பழைய பாலத்தில் இருட்டு நேரத்தில் தடுப்புகள் இல்லாதது தெரியாததால் அவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் சென்றனர். அந்த கார் ஆற்று வெள்ளத்தில் சுமார் 150 மீட்டர் வரை இழுத்துச் சென்ற நிலையில் திடீரென ஒரு மரக்கிளையில் சிக்கி நின்றது. அதன் பின் காரில் இருந்த இருவரும் ஜன்னல் வழியாக வெளியே வந்தனர். மேலும் இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக கார் மரக்கிளையில் சிக்கியதால் இருவரும் உயிர் தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.